எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் விவாதத்துக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்தார்.
முன்மொழிந்தார்...
கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
இந்திய மீனவர்கள்தான்....
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.மத்தியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார்கள். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நிலைமை மாறவில்லை....
இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து, புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு நாளைக்கு 2 மீனவர்கள்...
மார்ச் 27 அன்று, பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், 11 பேரை கடந்த 27-ம் தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள்.
மிகுந்த கவலையளிக்கிறது...
அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலையளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை மத்திய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.
வருந்தத்தக்கது...
கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை மத்திய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதல்வராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
பேச்சுவார்த்தை நடத்த....
ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்:
தீர்மானம்:
தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது.” என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்" என தெரிவித்தார்.
ஒரு மனதாக நிறைவேற்றம்...
கச்சத்தீவு விவகாரத்தில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயர் அப்பாவுவின் கோரிக்கையை அடுத்து தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
மறைந்த குமரி அனந்தனுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 23 பேர் உயிரிழப்பு
09 Apr 2025காஸா : காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்
-
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் - இ.பி.எஸ். அஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
09 Apr 2025டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
09 Apr 2025சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் : இந்தோனேசி அதிபர் அறிவிப்பு
09 Apr 2025காஸா : காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
-
மேற்குவங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மம்தா
09 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறினார்.
-
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
09 Apr 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
கான்வே மோசமான சாதனை
09 Apr 2025ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
-
சென்னைக்கு எதிராக சதம்: பிரியன்ஷ்-க்கு ஷ்ரேயாஸ் புகழாரம்
09 Apr 2025சண்டிகர் : ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பேட்டிங் என்றும், சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மேலும் 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை
09 Apr 2025ராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
-
சி.எஸ்.கே. தொடர் தோல்விகள்: பயிற்சியாளர் பிளெமிங் விளக்கம்
09 Apr 2025முல்லன்பூர் : சி.எஸ்.கே. தொடர் தோல்விகள் குறித்து பயிற்சியாளர் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
புள்ளிப்பட்டியல்....
-
தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையை கொன்ற தாயை கைது
09 Apr 2025காந்திநகர் : அழுது கொண்டு இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
-
நடத்தை விதியை மீறியதற்காக பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு 25 சதவீதம் அபராதம்: பி.சி.சி.ஐ.
09 Apr 2025சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-04-2025
10 Apr 2025 -
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள்: வரும் 16-ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
சென்னை பனையூரில் விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Apr 2025சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
-
பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா ஆஜர்: நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
10 Apr 2025புதுடெல்லி, மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போல
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 2,680 உயர்வு
10 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.
-
அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை ஏன்? மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
10 Apr 2025சென்னை, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
-
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: தமிழக அரசு அழைப்பு
10 Apr 2025சென்னை, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் பல்வேறு போட்டிகள்
-
மகாவீர் ஜெயந்தி: தமிழகத்தில் வாழும் சமண சமய மக்களுக்கு முதல்வர் வாழ்த்து
10 Apr 2025சென்னை, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்ட சமண சமய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காகிதமில்லா சட்டசபையாக புதுச்சேரி அறிவிப்பு
10 Apr 2025புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
-
மாணவியை வெளியே உட்கார வைத்த விவகாரம் கோவை தனியார் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்
10 Apr 2025கோவை, பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்