எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: வீரர்களின் சொதப்பல் பேட்டிங் காரணமாக டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை சி.எஸ்.கே. அணி பதிவு செய்தது.
டெல்லி பேட்டிங்...
ஐ.பி.எல். தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சி.எஸ்.கே.- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் அசத்தல்...
டெல்லி அணியின் மெக்கர்க்- கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் மெக்கர்க் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்மிழந்தார். இதனால் ரன் கணக்கை தொடங்காமல் டெல்லி விக்கெட்டை இழந்தது. 2ஆவது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் அபிஷேக் பொரேல் ஜோடி சேர்ந்தார். இவர் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் பொரேல். இந்த ஓவில் டெல்லி 19 ரன்கள் குவித்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் விளாசியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
அக்சார் படேல் 21 ரன்...
7ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பொரேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து அக்சார் படேல் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கருக்கு தூக்கினார். முதல் 10 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. அப்போது கேஎல் ராகுல் 29 ரன்களுடனும், அக்சார் படேல் 20 ரன்களுடனும் சேர்த்திருந்தனர். 11ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் அக்சார் படேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 90 ரன்னாக இருந்தது.
கே.எல். ராகுல் அரைசதம்...
4ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் விரைவாக ரன் குவிக்க முயற்சித்தது. 12ஆவது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் கிடைத்தன. 13ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன. 14ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து கே.எல். ராகுல் 33 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. 15ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க, ரிஸ்வி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் டெல்லி அணிக்க 17 ரன்கள் கிடைத்தன.
ரிஸ்வி அவுட்...
16ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 8 ரன்கள் கிடைத்தன. 17ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.
கேட்சை தவற விட்ட சவுத்ரி...
18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் ம்டுமே விட்டுக்கொடுத்தார். 19ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் கொடுத்த கேட்சை சவுத்ரி தவற விட்டார். 4ஆவது பந்தை ஸ்டப்ஸ் அபாரமாக சிக்சருக்கு தூக்கினார். அதோடு 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. அதோடு 19 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.
183 ரன் குவிப்பு...
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் அஷுடோஸ் சர்மா ரனஅவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரனா, நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தடுமாற்றம்...
இதையடுத்து, 184 ரன்கள் இலக்குடன் விளையாடிய சென்னை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ரவீந்திரா (3), கெயிக்வாட் (5), கான்வே (13) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால், பவர் பிளே முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஹாட்ரிக் தோல்வி...
தொடர்ந்து, துபே (18), ஜடேஜா (2) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால், 74 ரன்களுக்கே 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. தோனி 11வது ஓவரிலேயே களமிறங்கினார். விஜய் ஷங்கரும், தோனியும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். இருப்பினும் சென்னை அணியால் வெற்றியை நெருங்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது. விஜய் ஷங்கர் 54 பந்துகளில் 69 ரன்களும், தோனி 26 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
8வது இடம்...
இந்தப் போட்டியின் பவர் பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மும்பை (62/1), பெங்களூரு (30/3), ராஜஸ்தான் (42/1) ஆகிய அணிகளுக்கு எதிரான பவர் பிளேக்களிலும் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. இதன்மூலம், நடப்பு பிரீமியர் லீக் தொடரில் பவர் பிளேவில் குறைந்த பட்ச ரன்களை அடித்த அணியாக சென்னை மாறியுள்ளது. 7.4 ரன் ரேட் மட்டுமே வைத்துள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 11.7 ரன்ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
அ.தி.மு.க. தென் சென்னை வட்டச்செயலாளர் ‘ஐஸ்ஹவுஸ்’ மூர்த்தி நீக்கம்: இ.பி.எஸ்.
06 Apr 2025சென்னை : தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த வட்டக் கழக செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ்.
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெ.டன் உணவு பொருட்களை அனுப்பிய இந்தியா
06 Apr 2025புதுடெல்லி : நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ள மியான்மருக்கு அரிசி, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் என சுமார் 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா
-
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை குறைக்கப்பட்ட தமிழ் பாடங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
06 Apr 2025சென்னை : 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது.
-
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகிறார்?
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
-
பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் பழுது
06 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது.
-
வக்பு மசோதா நிறைவேற்றம்: தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு
06 Apr 2025பாட்னா : பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
-
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா? - நாம் தமிழர் சீமான் விளக்கம்
06 Apr 2025சென்னை : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது.
-
தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, தி.மு.க.
-
சி.பி.எம். கட்சியின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Apr 2025சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகள்: கேரளாவை சேர்ந்தவர் உள்பட 11 பேர் கைது
06 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.
-
இலங்கையில் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி
06 Apr 2025கொழும்பு : இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஏப். 5) வாக்குறுதி அளித்துள்ளார்.
-
பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம்: அமெரிக்கா மீது ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
06 Apr 2025கீவ் : பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம் என்று அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
-
எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போட வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போடுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
06 Apr 2025ஊட்டி : வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
குழாய்வழி குடிநீர் திட்டம் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 1 கோடியே 11 லட்சம் குடும்பங்களுக்கு பயன் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-04-2025.
06 Apr 2025 -
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம்
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்துள்ளது.
-
கழிவுநீரை ஆற்றில் கலக்கும் மெக்சிகோ: கூட்டாட்சிக்கு அழைக்கும் அமெரிக்கா
06 Apr 2025நியூயார்க் : கழிவுநீரை ஆற்றில் கலக்க மெக்சிகோ முடிவு செய்துள்ள நிலைியல், கூட்டாட்சிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
-
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவு: கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
06 Apr 2025புதுடெல்லி : ஆட்சியில் இருந்தபோது பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிட்டார் கெஜ்ரிவால் - பா.ஜ.க.