முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யார் அந்த தியாகி யார்? அ.தி.மு.க.கேள்விக்கு சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
Admk-Mla-2025-04-07

சென்னை, தமிழக சட்டப்பேரவைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 'அந்த தியாகி யார்?' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்துவந்த நிலையில், நொந்து நூடுல்ஸான அ.தி.மு.க.வினர்தான் தியாகிகள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், அந்த தியாகி யார் என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவையில் நேற்று டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு ரூ.1,000 கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி ஊழல் செய்த தியாகி யார் என்று கேட்டு அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் அப்போது அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை காட்டியதால், அவைக் காவலர்கள் மூலம் அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்ற அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டதோடு, பேரவையிலிருந்து அ.தி.மு.க.வினர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

பின்னர் அந்த தியாகி யார் என்ற கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அப்போது, மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு மறைந்த ஜெயலலிதா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வை அதற்குப் பிறகு பொறுப்பேற்ற இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடியவர், தாங்கள் சிக்கியிருக்கக் கூடிய பல்வேறு வழக்குகளிலிருந்து பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக யார் காலில் போய் விழுந்தார்களோ, அவ்வாறு விழுந்த நேரத்தில், அதனைப் பார்த்து நொந்து நூடுல்ஸாகிப் போன அ.தி.மு.க. தொண்டர்கள்தான் இன்றைய தியாகிகளாக இருக்கிறார்கள்.

முதல்வர் பதவியை வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ, அந்த அம்மையார் ஏமாற்றிப்போன நபர்தான் இன்று தியாகியாக உள்ளார். அந்த தியாகி யார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றதற்காகத்தான் இந்த விளக்கத்தைத் தந்திருக்கிறேனே தவிர வேறொன்றும் இல்லை என்று முதல்வர் பதிலளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து