முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் ராமர் கோயில்: பா.ஜ. மாநில தலைவர் அடிக்கல்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      இந்தியா
Ayodhy-Ramar 2024-01-31

Source: provided

புதுடெல்லி : ராமர் கோவிலுக்கு பா.ஜ.க. மாநிலத்தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல் நாட்டினார்.

மேற்கு வங்கத்தில் புதிய ராமர் கோயில் கட்டுவதற்காக அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமி முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. ராம நவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் சுமார் 2,500 ஊர்வலங்கள் நடைபெற்றன. பா.ஜ.க. மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலங்களுக்காக ஏராளமான மக்களைத் திரட்டினர். 

முஸ்லிம் பகுதிகளை இந்த ஊர்வலங்கள் கடக்கும்போது இருபுறமும் திரண்ட முஸ்லிம்கள் இனிப்புகள் விநியோகம் செய்தனர். மேலும், குடிக்க தண்ணீரும் வழங்கினர். மால்டாவில், முஸ்லிம்கள் இனிப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் பக்தர்கள் மீது பூக்களும் தெளித்து மதநல்லிணக்கத்தைக் காட்டினர். கொல்கத்தாவில் மட்டும் ராம நவமி அன்று 60-க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

இதையொட்டி தலைநகரின் பல முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டது. கைகளில் வாள் போன்ற ஆயுதங்களை ஏந்தியபடி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் அமைதியாகவே நடந்தது . இதனிடையே, புதிய ராமர் கோயில், பூர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில் உள்ள சோனாச்சுரா கிராமத்தில் கட்டப்படுகிறது. இதற்கு மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து