முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்ணனையாளர் குழுவில் இணைய டோனிக்கு ஹெய்டன் கோரிக்கை

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      விளையாட்டு
Dhoni 2024 11 13

Source: provided

சிட்னி : டோனி கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு எங்களுடன் வர்ணனையாளர் குழுவினருடன் வந்து இணைய வேண்டும் என்று ஆஸி.முன்னாள் வீரர்  மேத்யூ ஹெய்டன்  கூறினார்.

9-வது இடத்தில்... 

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு வெற்றி மட்டுமே கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ரசிகர்கள் விமர்சனம்...

குறிப்பாக சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் டோனி, ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 43 வயதான அவர், பேட்டிங்கில் இறுதி கட்டத்தில் இறங்கி அணிக்கு தோல்வியை கொடுத்து வருவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஓய்வு பெற வேண்டும்...

குறிப்பாக டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகளை எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைந்தார். எனவே அவர் ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொலைத்து விட்டார்... 

இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டிக்கு பிறகு டோனி கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் (டோனி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டிக்கு பிறகு அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு எங்களுடன் வர்ணனையாளர் குழுவினருடன் வந்து இணைய வேண்டும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து