முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டம் - ஒழுங்கு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

Source: provided

லக்னோ : கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்றுமுன்தினம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவில் வழக்குகளை குற்றவியல் விஷயங்களாக மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது மிகவும் தவறு. ஆனால் இது நடக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது.

இந்த நடைமுறை தவறு என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா? ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன. இது அபத்தமானது. கடன் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இருப்பதை மட்டும் வைத்து குற்றவியல் குற்றமாக அதை மாற்ற முடியாது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து