முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் வக்பு சட்டத்துக்கு எதிரப்பு தெரிவித்து பா.ஜ. தலைவர் வீடு தீக்கிரை : ஊரடங்கு சட்டம் அமல்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      இந்தியா
Manipur 2023 06 06

Source: provided

இம்பால் : பா.ஜ.க. சிறுபான்மைத் தலைவர் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து,  மணிப்பூரில் ஊரடங்கு  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

முஸ்லிம்கள் நிலங்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமானது. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இந்த மசோதா பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்பட்டுள்ளன.

இந்நிலையில் வக்பு மசோதாவை எதிர்த்து மணிப்பூரில் போரட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூரின் லிலாங், இம்பால் கிழக்கில் வக்பு சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லிலாங் பகுதியில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து அங்கு கண்ணீர் புகை குண்டுகள், பிரம்புகள், உடல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப் பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

குராய் குமிடோக் பஜாரில் நேற்று திட்டமிடப்பட்ட "மனித சங்கிலிப் போராட்டம்" த்துக்கு முன்னதாக  இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மசோதாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பா.ஜ.க. சிறுபான்மைத் தலைவர் அஸ்கர் அலியின் லிலாங் பகுதியில் உள்ள வீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திங்களன்று லிலாங் பகுதியில் ஊரடங்கு  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து