முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணமா? அமைச்சர் சிவசங்கர் பதில்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை : ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டக் கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிருக்கான இலவச பயணத் திட்டத்துக்கு தனது முதல் கையொப்பத்தை இட்டார்.  இந்தத் திட்டத்தின் மூலமாக 600 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை சேமிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தின்போது திருவாடனை பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், “பழைய பேருந்துகளை மாற்றி தரவேண்டும் என்றும் பெண்கள் விடியல் பயணம்போல் ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ”புதிய பேருந்துகள் மாற்றிக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உங்கள் தொகுதியில் இயங்கும் பழைய பேருந்துகளும் மாற்றியமைத்து தரப்படும். ஆண்களுக்கு இலவச பயணம் என்பது வரவேற்கத்தக்கது. இதுவரை ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் பெண்கள், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக விடியல் பயணம், கலைஞர் உரிமைத்தொகைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் நிதிநிலை சீராகும்போது உங்களது கோரிக்கையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து