முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : கடந்த 2022-ம் ஆண்டு மேற்கு வங்க பணியாளர்கள் தேர்வாணையம் உருவாக்கிய கூடுதல் ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, "மேற்கு வங்க கல்வித்துறையில், தேவையான ஆலோசனைகள் மற்றும் ஆளுநரின் ஒப்புதலுடனும் தான் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதால் அதில் நீதிதுறையின் தலையீடுக்கு அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க ஆசிரியர் பணியிடங்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இடைநிறுத்தி வைத்திருந்த சுப்ரீம் கோர்ட் நேற்று அந்தத் தீர்ப்பினை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த ரத்து உத்தரவு, கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவக்கியது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மட்டுமே கட்டுப்படுத்தும். இந்த ஆசிரியர்கள் பணியிட வழக்குத் தொடர்பான பிற அம்சங்களான, மாநிலத்தின் முன்னாள் கல்வியமைச்சர் பார்தா சாட்டர்ஜியின் கைது, குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட சி.பி.ஐ.-யின் மற்ற விசாரணை அம்சங்களுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பணியாளர்கள் தேர்வாணையம் கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கொல்கத்தா உயர்நீதிமன்றம், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது சட்டவிரோதம் என்று தெரிவித்திருந்தது. இந்த முடிவுத்தொடர்பாக அமைச்சரவை உறுப்பினர்களை விசாரணைக்காக காவலில் எடுக்குமாறு மத்திய புலனாய்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து