முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் : ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025      இந்தியா
Geram 2024-12-23

Source: provided

புதுடெல்லி : சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உங்களை தொடர்பு கொண்டு வங்கி அட்டை எண் பாஸ்வேர்டு உள்ளிட்டவை குறித்து விபரங்கள் கேட்டால் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள்' என ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் அதன் உபயோகிப்பாளர்களுக்கு 'இ - மெயில்' அனுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளை பெற 9 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தினமும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. www.irctc.co.in என்ற இணையதளம் மற்றும் 'கூகுள் பிளே ஸ்டோரில் irctc rail connect app' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவைகளை பெறலாம். இந்தச் செயலியை நிறுவுவதற்கு எஸ்.எம்.எஸ். அல்லது 'வாட்ஸாப்' தகவல்கள் கேட்கப்படாது.

ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி., பெயரில் ஓரிரு எழுத்துக்களை மாற்றிக்கொண்டு சிலர் வாட்ஸாப் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக போலியாக எஸ்.எம்.எஸ்., 'லிங்க்' அனுப்பி வருகின்றனர். சிலர் 'வாய்ஸ் கால்' அழைப்பிலும் பேசுவதாக புகார்கள் வருகின்றன. எனவே ஐ.ஆர்.சி.டி.சி. உபயோகிப்பாளர்கள் இதுபோன்ற இணைப்புகளை 'க்ளிக்' செய்ய வேண்டாம். இந்த லிங்க் பயன்படுத்தினால் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களை தொடர்பு கொண்டு வங்கி அட்டை எண் பாஸ்வேர்டு உள்ளிட்டவை குறித்து விபரங்கள் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து, ஐ.ஆர்.சி.டி.சி. உபயோகிப்பாளர்களுக்கும் 'இ - மெயில்' வாயிலாக தகவல் அனுப்பி வருகிறோம். என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து