முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் அருகே பரபரப்பு: போலீசாரை கண்டித்து விஷம் குடித்த 2 சகோதரிகளில் ஒருவர் உயிரிழப்பு

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு 2 சகோதரிகளும் விஷம் குடித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவரை ஓர் வழக்கின் விசாரணைக்காக நடுகாவிரி காவல் நிலையத்தி்ற்கு போலீசார் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரின் சகோதரிகள் கீர்த்திகா வயது (29), மேனகா(31) போலீஸ் நிலையத்திற்கு தனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை கண்டித்து சகோதரிகள் இருவரும் காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சகோதரி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி மேனகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து