முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு எதிராக சதம்: பிரியன்ஷ்-க்கு ஷ்ரேயாஸ் புகழாரம்

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2025      விளையாட்டு
Shreyas -Ishaan-Kishan

Source: provided

சண்டிகர் : ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பேட்டிங் என்றும், சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம் சூட்டியுள்ளார்.

6 விக்கெட்டுகள்... 

ஐ.பி.எல். போட்டியின் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை சாய்த்தது. முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்க்க, சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்களே எடுத்தது. இதில் பஞ்சாப் அணியின் இளம் வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்தில் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர்தான் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

வலுவான பேட்டர்... 

அவரது ஆட்டம் குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது: இதுதான் எங்களது டெம்ப்ளேட். எந்தத் திடலில் விளையாடினாலும் இதுதான் எங்களது டெம்ப்ளேட்டாக (மாதிரி வடிவம்) இருக்கிறது. எங்களிடம் வலுவான பேட்டர்கள் இருக்கிறார்கள். பிரியன்ஷ் ஆர்யா விளையாடிய விதம் பார்க்க ஆவலாக இருந்தது. அவர் விளையாடியது இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட இன்னிங்ஸாக இருந்தது.

கவனம் செலுத்த... 

கடந்த போட்டியில் அவரிடம் பேசும்போது ஜோஃப்ரா ஆர்ச்சரை எதிர்கொள்வதிலும் முடிவு எடுப்பதிலும் சற்று தயக்கம் இருந்ததாகக் கூறினார். சிஎஸ்கேவுடன் தனது உள்ளுணர்வை பயன்படுத்தியுள்ளார். தயக்கமே இல்லாமல் விளையாடினார். ஃபீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் இந்த அணியில் அனைவருக்கும் இந்தமாதிரியான எண்ணம்தான் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

சிறந்த பேட்டிங்... 

ஐ.பி.எல். வரலாற்றிலேயே நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுதான். துபேவுக்கு சஹாலை பந்துவீசாதது திட்டமிட்டு செய்தேன். அது நன்றாகவும் வேலை செய்தது. நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை இன்னும் விளையாடவில்லை. ஆட்டத்தில் வென்றாலும் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த அணியும் கேட்ச்சிங் செஷனுக்கு செல்ல வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து