முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக தலைவர் பதவிக்கு விருப்ப மனுவை இன்று சமர்ப்பிக்கலாம்: பா.ஜ.க. அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
BJP-Office

சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஏப். 11) விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 2023 செப்டம்பரில் முறிந்த அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே தமிழகத்திற்கு புதிய பா.ஜ.க. தலைவரை தேர்வு செய்யும் பணிகளையும் கட்சி மேற்கொண்டுள்ளது. புதிய தலைவர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் பா.ஜ.க. முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு இன்று (ஏப். 11) விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  நமது கட்சியின் அமைப்பு பருவ தேர்தல்  கிளை தொடங்கி மாவட்டத் தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. 

மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து