முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவத்துக்காக 52 புதிய செயற்கைக்கோள்களை ஏவ திட்டம்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      இந்தியா
ISRO PSLV-2024-12-05

Source: provided

புதுடில்லி : இந்திய ராணுவத்துக்கான  ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 பிரத்யேக செயற்கைக்கோள்களை ஏவ உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், பல்வேறு வகையிலான தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்கிடையில், இந்திய ராணுவம் அதன் சொந்த தனிப்பட்ட பணிக்காக ஜிசாட்-7பி என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதன்மூலம் எல்லைப் பகுதிகளில் அதன் கண்காணிப்பு திறன்களை மேலும் மேம்படுத்த இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு (2026) விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில். ஜிசாட்- 7 பி மேம்பாட்டிற்காக மத்திய அரசு நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் (என்.எஸ்.ஐ.எல்.) ரூ.3 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு உள்ளது.

'பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைகளை கண்காணிப்பதற்கும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், மேம்பட்ட சென்சார்கள், உயர் தெளிவுத்திறன் படங்களின் அமைப்புகள் மற்றும் அனைத்து வானிலை நிலைகளிலும் 24 மணி நேரமும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் ராணுவ செயற்கைக்கோள்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய ராணுவத்துக்கான உளவுத்துறை சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்காக ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 பிரத்யேக செயற்கைக்கோள்களை ஏவ உள்ளன. இஸ்ரோவின் லட்சியத் திட்டத்தை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் அறிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து