முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
GK-Vasan

Source: provided

சென்னை : சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷாவை ஜி.கே. வாசன்  சந்தித்து பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அமித் ஷாவை சந்தித்து பேசியது குறித்து ஜி.கே. வாசன் கூறியதாவது:- அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இருந்தபோதிலும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், இன்றைய அரசியல் களநிலவரத்தை பற்றியும் பேசினேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதை தி.மு.க. அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களை திசை திருப்ப பல்வேறு தேவையற்ற விசயங்களை பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினேன். இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

அமைச்சர் அநாகரிகமாக பேசியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, பொறுப்புள்ள அமைச்சர் ஒருவடைய பேச்சு அநாகரிமானது, அருவருப்பானது. இதுதான் அவர்களுடைய மாடலா? எனக் கேட்க விரும்புகிறேன். சற்றும் தாமதிக்காமல் அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் அவரை நீக்க வேண்டும். இதுதான் தமிழகத்தில் உள்ள பெண்களின் எண்ணமாக உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து