முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கரை, அமித்ஷா விமர்சித்த போது எங்கே கவர்னர் போனார்..? - அமைச்சர் கோவி.செழியன் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

Source: provided

சென்னை : அம்பேத்கரை, அமித்ஷா விமர்சித்த போது கவர்னர் எங்கே போனார்? என அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வடுக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல்,   தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கம் போல ஒலமிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, அபத்தமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

சமூகநீதிக் குறித்துப் பேசும் இந்த மாநிலத்தில் செருப்பு போட்டுச் செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்திற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்" எனப் பச்சை பொய்யைச் சொல்லியி ருக்கிறார் ஆளுநர்.  உங்கள் சொந்த மாநிலத்தில் இப்படி அநீதி நடந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டைப் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?  

சனாதனம் போதித்த சாதியால் ஏற்பட்ட இழிவுகளை அகற்றத்தானே அம்பேத்கர் போராடினார். இனிப்பும் உப்பும் எப்படி ஒரே சுவை தர முடியும்? சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! உங்களின் 'டபுள் ரோல்' நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது.

 "இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என   நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா   சொன்னபோது  ஒரு கண்டனக் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?  

நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறைகளும் கொடுமைகளும் நடைபெறுவது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் என்பதை  மத்திய அரசின் தரவுகளே சொல்கின்றன. ஆரியம் பேசும் நீங்கள் அம்பேத்கரைப் போற்றி பாடுகிறீர்கள். புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து