முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மேடையில் லல்லு - நிதிஷ்குமார் வாக்கு வாதம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜன.20 - ஒரே மேடையில்  லல்லு நிதிஷ்குமார் வாக்கு வாதம் செய்தனர்.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தைனிக் பாஸ்கர்  என்ற ஹிந்தி நாளிதழின் பாட்னா பதிப்பு விழா பாட்னா வில் நடைபெற்றது. பீகார் மாநில அரசியலில் இரு துருவங்களாகச் செயல்படும் லல்லு பிரசாத்தும், நிதிஷ் குமாரும் இதில் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயும் இந்த விழாவில் கலந்து கொ ண்டார்.

இந்த விழாவில் லல்லு பிரசாத் பேசும் போது, நிதிஷ்குமாரின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக அவரைத் தாக்கிப் பேசினார். பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றிய செய்தியை வெளியிடாமல் சிலர் தடுப்பதாகவும், இதற்காக பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரங்களை அதிக அளவு அளித்து வருவதாகவும் நிதிஷ்குமாரை மறைமுகமாக லல்லு பிரசாத் தாக்கிப் பேசி னார். 

அதற்குப் பிறகு பேசிய நிதிஷ்குமார், டுவிட்டர் சமூக வலைதளத்தில் இளம் தலைமுறையினர் தான் கணக்கு வைத்துருப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில முதியவர்களும், தங்களது வயதை மறந்து டுவிட்டர் வலை தளத்தில் கணத்கு தொடங்கி இருக்கின்றனர். பீகாரில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை விவகாரங்களில் நான் தலையிடுவது கிடையாது. ஆனால் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி புரிந்த காலத்தில் எந்த செய்தி எந்தப் பக்க தில் வரவேண்டும் என்பதுபோன்றவை அந்த கட்சித் தலைவர்களால் முடிவு செய்யப்பட்டன என்றார்.                                         

        

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago