முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்யாவில் எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம்

வியாழக்கிழமை, 1 மே 2014      உலகம்
Image Unavailable

 

 நைரோபி, மே 2 - கென்யாவில் ஒருவர் எத்தனை  பெண்களையும் திருமணம்செய்து கொள்ளலாம். இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கென்யாவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் பலதார உறவுமுறைகளை வைத்துள்ளனர்.  இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடிவு செய்த அரசு ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் களை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் கடந்த மாதம் சட்ட மசோதாவை நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்தது.

 இந்த மசோதா மீதான விவாதத்தில் ஆண் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், பெண் உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும் பேசினர். தங்களது எதிர்ப்பையும் மீறி மசோதாவை சட்டத்தை நிறைவேற்ற முயன்றதால் பெண் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்துக்கு அதிபர்  அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்று மகளிர் அமைப்பினரும், கிறிஸ்தவ பாதிரியார்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

குடும்பம் என்ற அமைப்பை சீர்குலைக்கும் முதலில் மணந்து கொண்ட  மனைவி தெருவில் நிறுத்தப்படுவார் என்பது போன்ற கருத்துகளை முன் வைத்து பெண்கள் அமைப்பினரும், கிறிஸ்தவ மத ரீதியான கோட்பாடுகளுக்கு எதிரானது என்று பாதிரியார்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால் எதி்ர்ப்பை  மீறி கென்யா அதிபர் உஹூரு கென்யாட்டா  இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத் திட்டுள்ளார்.இந்த சட்டப்படி ஒருவர் முதல் மனைவி சம்மதம் இல்லாமல் வேறு பெண்களை திருமணம் செய்யலாம். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக தேசிய பெண் வக்கீல்கள் சம்மேளனம் அறிவி்த்துள்ளது.

    

              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்