முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பண விவகாரம்: இந்தியாவுக்கு சுவிஸ் அழைப்பு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

சுவிஸ், ஜூலை.22 - கருப்புப் பண விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த சுவிட்சர்லாந்துக்கு வருமாறு இந்திய குழுவினருக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலை மையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரியில் வரி விதிப்பு நடைமுறைகள் தொடர்பாக சுவிட்சர்லாந்து குழுவினர் டெல்லி வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கருப்புப் பண விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நிதித்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத் திடம் அண்மையில் கூறியபோது, கருப்புப் பணம், வரிவிவகாரங்கள் குறித்து விவாதிக்க பெர்ன் நகருக்கு வருமாறு இந்திய குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்