முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேட்டோ படைகளின் எண்ணெய் லாரிகளுக்கு தீ வைப்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூன்.16 - பாகிஸ்தானில் சென்று கொண்டியிருந்த நேட்டோ படைகளின் எண்ணெய் லாரிகளை தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர். ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலும் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்க படையின் கீழ் நேட்டோ படைகள் வேட்டையாடி வருகின்றனர். நேட்டோ படைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலன் பகுதியில் இருந்துதான் செல்ல வேண்டும். நேட்டோ படைகளுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் லாரிகள் நேற்று போலன் பகுதி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு சென்று கொண்டியிருந்தன. அப்போது இரண்டு தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த எண்ணெய் லாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் லாரிகளுக்கு தீ வைத்துவிட்டு ஓடி விட்டனர். இதில் அந்த இரண்டு எண்ணெய் டேங்கர்களும் தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலும் பாகிஸ்தான் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். தீ வைத்தவர்கள் அமெரிக்க கூட்டுப்படை எதிர்ப்பாளர்களாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நேட்டோ படைகளுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான எண்ணெய் டேங்கர்களையும் சரக்கு லாரிகளையும் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்