முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.,தை வீழ்த்த கவனம் செலுத்த கவாஸ்கர் அறிவுரை

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable


புது டெல்லி, ஆக.08 - டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரில் இதுவரை 3 டெஸ்ட் முடிந்து விட்டது. தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடர்ந்தது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் ஜடேஜாவை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தள்ளிவிட்டார். இது தொடர்பாக ஐசிசி விசாரணை கமிஷனர் கார்டன் லீவிஸ் விசாரணை நடத்தி இருவர் மீதும் தவறு இல்லை என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐசிசி மேல் முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஜடேஜாவை தள்ளியவிவகாரத்தில் ஆண்டர்சன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்திய வீரர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜடேஜாவுக்கு மட்டும் அபதாரம் விதிக்கப்பட்டதால் கேப்டன் டோனி கடும் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் ஆண்டர்சன் விவகாரம் முடிந்து போன ஒன்று. அதை மறந்துவிட்டு இங்கிலாந்தை வீழ்த்த கவனம் செலுத்துங்கல் என்று இந்திய வீரர்களுக்கு முன்னால் கேப்டனும், டெலிவிசன் வர்ணளையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
ஆடுகளத்தில் இதற்கு பதில் பேசாமல் பேட் மற்றும் பந்துவீச்சு மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்பக்கூடியவன். ஜடேஜாவை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஆண்டர்சன் தள்ளி விட்ட விவகாரம் முடிந்து விட்டது. இதனால் இந்திய வீரர்கள் இந்த விவகாரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 4-வது டெஸ்டில் இங்கிலாந்தை எப்படி வீழ்த்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்