முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுசக்தி பேச்சு: விரைவில் இந்தியா - ஆஸ்தி., திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable


நேப்பிடா, ஆக.11 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
இதன்மூலம், இந்த ஒப்பந்தத்துக்கு விரைவாக இறுதி வடிவம் கொடுக்க முடியும் என்று இரு நாடுகளும் கருதுகின்றன. மியான்மர் நாட்டின் தலைநகர் நேப்பிடாவில் தென்கிழக்கு ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் விதமாக 4 நாள் சுற்றுப்பயணமாக மியான்மருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப்புடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து சுஷ்மா சுவராஜ் பேச்சு நடத்தினார். அப்போது இந்த ஒப்பந்ததத்தை விரைந்து மேற்கொள்ளும் வகையில், பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்த இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
மேலும், ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் குறித்தும், புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் இந்தியர்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவுகள் மேம்படும் நிலையில் அது இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் தாதுவை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
யுரேனியம் தாது வளத்தை அதிகம் பெற்றுள்ள உலக நாடுகளில் 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அந்நாடு ஆண்டுக்கு 7 ஆயிரம் டன் யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. எரிபொருள் தேவை அதிகமுள்ள இந்தியா, தனது பொருளாதார வள்ச்சியை எட்ட அணுசக்தியை எதிர்நோக்கியுள்ளது.      
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்