முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிரி விவகாரம் விரைவில் தீர்க்கப்படும்: கே.பி.ராமலிங்கம்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.24 - தி.மு.க. தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத் தில் கே.பி.ராமலிங்கம் எம்.பி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொன்முடியும் உடன் இருந்தார். இடை நீக்கம் செய்யப்பட்ட மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை கருணாநிதி எடுத்துள்ளதாகவும், அதற்கான உறுதியையும் கே.பி.ராமலிங்கத்திடம் கருணாநிதி அளித்துள்ள தாகவும் அறிவாலய வட்டாரங் கள் தெரிவித்து உள்ளன.

இந்த சந்திப்பு தொடர்பாக கே.பி.ராமலிங்கம் கூறியதாவது:-

தந்தையும், மகனும் சந்தித்து கொள்வது போன்ற பாச சந்திப்பாகத்தான் அது இருந்தது. என்னிடம் எதுவும் அவர் கடுமையாக பேசவில்லை. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல அவருடன் பேசிக் கொண்டு இருந்தேன்.

டெல்லி அரசியல் விவகாரம் உள்பட அனைத்து விவகாரங்கள் தொடர்பாக வும் பேசினோம். மு.க.அழகிரி விவகாரம் தொடர்பாகவும் பேசினோம். கருணாநிதியுடனான சந்திப்புக்கு பிறகு அழகிரி விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

பாரதீய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தமிழுக்காகக் குரல் கொடுத்து வருவதற்கு கருணாநிதி என் மூலம் பாராட்டு தெரிவிக்க சொல்லி இருந்தார். அவருக்கு தமிழகத்தில் தமிழ் அறிஞர்களை வைத்து ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் என்னிடம் கூறினார். விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன். இவ்வாறு கே.பி.ராம லிங்கம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்