முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மீது பொருளாதார தடை! அமெரிக்க தமிழர் வரவேற்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஜூன்.- 23 - இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இறுதி போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை அமைத்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. குழு அளித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
ஆகவே இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்றும் அண்மையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்காவில் செயல்படும் தமிழ் அரசியல் செயல் கவுன்சில் என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஜெயராஜா கூறுகையில், இலங்கை மீது பொருளாதார தடை விதித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அந்த தீர்மானத்தை நிறைவேற்றிய சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணையில் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்