முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்கிறோம்: சோனியா

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 21 - மகராஷ்டிரம், அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இரு மாநில பேரவை தேர்தல் முடிவுகளை நாங்கள் பணிவுடன் ஏற்று கொள்கிறோம். இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வாக்குறுதி அளித்து பாஜக பிரச்சாரம் செய்தது. அந்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றும் என்று நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தளராது உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கூறுகையில், மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். மகராஷ்டிரத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகும், அரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற காங்கிரஸ் கடினமாக உழைக்கும். வெற்றி பெற்ற பாஜகவுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

இந்திய கம்யூனி்ஸ்டு கட்சி தேசிய செயலர் டி. ராஜா கூறியிருப்பதாவது,

இரு மாநிலங்களிலும் வெளியான தேர்தல் முடிவானது மக்கள் காங்கிரசின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்பதை தான் காட்டுகிறதே தவிர இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடியின் அலையால் ஏற்பட்டது அல்ல. இரு மாநிலங்களிலும் வலுவான பிற கட்சிகள் இல்லாத காரணத்தால் அது பாஜகவுக்கு சாதகமாகி போனது என்று டி. ராஜா தெரிவித்தார். தேர்தல் முடிவு குறித்து அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா கூறுகையில், அரியானாவில் கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் செய்த வளர்ச்சி பணிகளை அடுத்து அமையும் அரசும் பின்தொடர்ந்து மேற்கொள்ளும் என நம்புவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்