முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

மதுரை - ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளருக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த தமிழரசன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய வங்கிகள் சங்க வேண்டுகோளின்படி ஏடிஎம்களில் கட்டணம் இன்றி பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி கணக்கு வைத்திருக்கும் வங்கி தவிர மற்ற வங்கிகளில் 5 முறை சேவை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்று இருந்ததை 3 முறை மட்டுமே என குறைந்துள்ளது. முதல்கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, புது டெல்லி, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் இந்த கட்டுப்பாடு கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் நலனை புறக்கணிப்பது சரியல்ல. எனவே ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் வி. தனபாலன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்குமாறு ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர், இந்திய வங்கிகள் சங்க தலைமை நிர்வாகி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து