முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.2 - மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை முதல்வர் ஜெயலலிதா முன்கூட்டியே அதாவது ஜூன் 6 ம் தேதியே அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டார். இவ்வாறு முன்கூட்டியே திறந்து விடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறுவை சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஜெயலலிதா உத்தரவிட்டதை அடுத்து அப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் பருவ மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து இந்த அணைகளில் இருந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் மேட்டூருக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அணையில் இருந்து பாசனத்திற்காக 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று இந்த அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. இதனால் கடைமடை பகுதி விவசாயிகளும் பலனடைவார்கள். அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளனர். மேட்டூர் அணையில் தற்போது 97.8 அடியாக நீர் மட்டம் உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். மழை கர்நாடகத்தில் வெளுத்து வாங்குவதால் அங்கிருந்து வரும் கூடுதல் நீரால் அணை நிரம்பினாலும் ஆச்சரியமில்லை. விவசாயிகள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்