முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரம்பு மீறி பேசக்கூடாது: பா.ஜ.க எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பொது மேடைகளில் வரம்பு மீறி பேசி, பிரச்சினைகளில் சிக்கவேண்டாம் என்று பாஜக எம்.பி.க்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
சமீப நாட்களாக, பாஜக எம்.பி.க்கள் வரம்பு மீறும் வகையில் மேடைகளில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் அதிகம் எழுப்பப்பட்டு, மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எம்.பி. சாக் ஷி மஹராஜ் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. இதற்கு முடிவு கட்டும் வகையில், கட்சி எம்.பி.க்களை மோடி எச்சரித்துள்ளார்.
வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்காக, அன்றைய தினம் சிறந்த நிர்வாக நாளாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மக்களிடையே கொண்டு செல்வதற்கு கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்களை அரசு நடத்த உள்ளது. இதை குறிப்பிட்டு பேசிய மோடி, அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பின், எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் ரத்ததானம், இலவச உடல் மற்றும் கண் பரிசோதனை முகாம் உட்பட பல்வேறு முகாம்களை நடத்த வேண்டும் எனவும் ஏழைமக்கள் கடும் குளிரை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு கம்பளி போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக விநியோகிக்க வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார்.
இதில், எம்.பி.க்களின் பணிகள் வெறும் பெயரளவில் என்றில்லாமல் வெளிப்படையாக மக்கள் பேசும் வகையில் இருக்கவேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து