முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைசாதியினருக்கு ஆயுதம் கொடுப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது- சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 6  - பாதுகாப்பை கருத்தில் கொண்டு மலைசாதியினர்களுக்கு ஆயுதம் வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சட்டீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மலைசாதியினர் வசிக்கும் பகுதியில்தான் அதிக அளவு தங்கியிருப்பது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து மலைசாதியினர் யாராவது போலீசுக்கு துப்புக்கொடுத்தால் அவர்களை மாவோயிஸ்ட்கள் கொன்றுவிடுகின்றனர். இல்லாவிட்டால் கடத்தி சென்று சித்ரவதை செய்கின்றனர். இதனால் மலைசாதி வகுப்பை சேர்ந்த இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க சட்டீஸ்கார் மற்றும் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான கல்வி தகுதியையும் நிர்ணயித்தது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் பி.சுதர்ஸன், எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச், மலைசாதி இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கவும் அவர்களுக்கு ஆயுதம் கொடுப்பதற்கும் தடை விதித்தது. மலைசாதியினர்களுக்கு ஆயுதம் கொடுத்து அவர்களை மாவோயிஸ்ட்களுக்கு எதிராக போராட பயிற்சி கொடுப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி தகுதியும் மிகவும் குறைவு. இதுவும் அரசியல் சட்டத்திற்கு எதிரானதுதான்.  மலைசாதியினர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிப்பதை சட்டீஸ்கர் மற்றும் மத்திய அரசு நிறுத்த வேண்டும். கோயா கமாண்டோஸ், சல்வா ஜூடும் ஆகியோர்களை உருவாக்கி இருப்பதும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானதுதான். சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோஸ்ட்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்க்க சென்ற சுவாமி அக்னிவேஷை மாவோயிஸ்ட்கள் தாக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்