முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் இறங்க விருப்பமில்லை: ஹசாரே

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

மும்பை - அரசியல் சேற்றில் இறங்க விருப்பமில்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் மேலும் கூறியதாவது,
 
இந்த விவகாரம் என்னிடம் மீண்டும் கொண்டு வரப்படுகிறது. அரசியல் சகதிக்குள் நான் இறங்க விரும்பவில்லை. ஜன லோக்பால் விவகாரத்துக்கான எனது அடுத்த கட்ட போராட்டம் குறித்து டெல்லி சட்டசபை தேர்தல் நிறைவடைந்த பிறகு முடிவு செய்வேன். இந்த போராட்டத்தில் என்னுடன் கலந்து கொள்பவர்கள் குறித்தும் டெல்லி தேர்தலுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றார்.
 
இருப்பினும் பாஜகவில் இணைந்த கிரண்பேடி குறித்து அவர் நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக பாஜகவில் சேர்ந்த கிரண்பேடியிடம் அன்னா ஹசாரேயிடம் பேசினீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் ஹசாரேயை தொலைபேசி மூலம்தான் தொடர்பு கொண்டேன். ஆனால் தனது தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
 
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வரக் கோரி முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அதில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண்பேடியும் தீவிரமாக பங்கெடுத்தனர். பின்னர் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கிய போது அவரை ஹசாரேயும், கிரண்பேடியும் விமர்சித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து