முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவ விழா: காளஹஸ்தீஸ்வரர் கிரிவலம்

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீகாளகஸ்தி - ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 10வது நாளான நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு கோ பூஜை, 3 கால அபிஷேகங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்தன. 8 மணிக்கு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் ஜனதா அம்பாரி வாகனங்களில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக கைலாசகிரி மலையை அடைந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்களும், கிரிவலம் சென்றனர். கிரிவலம் முடிந்ததும் உற்சவ மூர்த்திகள் கைலாசகிரி மலையில் இருந்து பக்தர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலை அடைந்தனர். அதை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு 4ம் கால அபிஷேகம் நடந்தது. பின்னர் இரவு 9.30 மணிக்கு குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்ரரும், சிம்ம வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி கோவிலில் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 11வது நாளான நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் கேடிகம் வாகனத்தில் வீதியுலா வந்தனர். இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் வீதியுலா வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து