முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பண விவகாரம்: ஹசாரயுடன் ராம்ஜெத்மலானி சந்திப்பு

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - கருப்புப் பணம் விவகாரம் தொடர்பாக அன்னா ஹசாரேயுடன் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சமூக ஆர்வலர் அன்னாஹசாரே தற்போது மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஜவின் முன்னாள் தலைவரும் பிரபல மூத்த வக்கீலுமான ஜெத்மலானி டெல்லியில் உள்ள மகாராஷ்ட்ரிய சதனில் தங்கியுள்ள அன்னாஹசாரேவை சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கருப்புப் பண விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

சந்திப்புக்கு பின்னர் ராம்ஜெத்மலானி நிருபர்களிடம் கூறுகையில், கருப்புப் பணத்தை மீட்பதில்  அரசு தீவிரம் காட்டவில்லை. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் எதுவும் கருப்புப் பண விவகாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது குறித்து அன்னா ஹசாரேயுடன் நான் விவாதித்தேன். மேலும் ஏற்கெனவே நான் பாஜகவின் தலைவராக இருந்தவன் என்ற முறையிலும்  இது குறித்து அவரிடம் பேச வேண்டிய அக்கறை காட்டவில்லை என்று ராம்ஜெத்மலானி தெரிவித்தார்.

அன்னா ஹசாரே கூறுகையில், கருப்புப் பண விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மக்களை தவறாக திசை திருப்பி வருகிறது. பிரதமர் மோடி என்ன சொன்னார்? கருப்புப் பணத்தை மீட்போம். அதனை இந்தியர்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை சேர்ப்போம் என்றார். ஆனால் 15 ரூபாயையாவது அவரால் கடந்த 9 மாதங்களில் தர முடிந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து