முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ம் வகுப்பு தேர்வில் தொழுவந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளி 94 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

வியாழக்கிழமை, 21 மே 2015      தமிழகம்

சென்னை - பத்தாம் வகுப்பு தேர்வில் தொழுவந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளி 94 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.விழுப்புரம் மாவட்டம்,  தொழுவந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 மாணவர்கள் தேர்வு எழுதினர்.  அவர்களில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94 சதவீதமாக உள்ளது.  தேர்வு எழுதிய மாணவர்களில் 451 மதிப்பெண்களுடன்  மாணவி சுந்தரி    முதலிடத்தையும் , 415  மதிப்பெண்களுடன் மாணவி தி.அகிலா  2 ம் இடத்தையும், 399  மதிப்பெண்களுடன் இளமதி 3 ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

 மேலும் 350 மதிப்பெண்களுக்கு அதிகமாகப் பெற்று சாதனை  படைத்துள்ளனர்   தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜெயவேல்,   கடுவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், பள்ளி கல்விக்குழுத்தலைவருமான  ராதாகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் நிர்வாகிகள் முத்துவேல், பெருமாள், தருமலிங்கம்,   சத்துணவு பொறுப்பாளர் செல்வம் ஆகியோரும் ஆசிரியர், ஆசிரியர்களும் மாணவிகளை பாராட்டினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து