முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில், ரூ.2.4 கோடி காணிக்கை

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் மலையப்ப சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார்.

இதைக்காண நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 2-வது நாளன்று காலை 3 மணி முதல் நள்ளிரவு 12.30 மணிவரை மூலவரை 75 ஆயிரத்து 374 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் ரூ.2 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். மேலும் ஆர்ஜித டிக்கெட்டுகள் மூலம் ரூ.46 ஆயிரத்து 381 வருவாய் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் விற்றதன் மூலம் ரூ.43 லட்சத்து 82 ஆயிரத்து 160 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அன்ன பிரசாதம் 86 ஆயிரத்து 676 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இத்தகவலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்