முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி நிர்மல்யாதவிற்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

சண்டிகார், மார்ச் - 5 - நீதிபதிகளின் வாசற்படியில் ரொக்கம் என்ற ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  பெண் நீதிபதி நிர்மல்யாதவிற்கு எதிராக சண்டிகாரில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகை  தாக்கல்  செய்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நீதிபதிகளின் வாசற்படியில் ரொக்கம் என்ற ஊழல் விவகாரம் பெரிய அளவில் விசுவரூபம் எடுத்தது. அப்போது பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த நிர்மல்யாதவ் மீது ஏராளமான புகார்கள் எழுந்தன. இதை அடுத்து நிர்மல் யாதவ் உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ.அதிகாரிகள் ஊழல்  தடுப்பு  சட்டம், இந்திய  தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ்  வழக்கு பதிவு  செய்தனர்.

இது  தொடர்பான  வழக்கு விசாரணை சண்டிகார் நகரில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று இந்த கோர்ட்டில் நீதிபதி நிர்மல்யாதவிற்கு  எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை  தாக்கல்  செய்தனர்.

பிறகு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதிக்கு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ரீட்டுதாக்கூர்  ஒத்திவைத்தார்.

சி.பி.ஐ. தாக்கல்  செய்துள்ள 25 பக்க குற்றப்பத்திரிகையில்  நிர்மல்யாதவ் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. உள்ளூர் வக்கீல்  சஞ்சீவ்பன்சால், டெல்லி தொழில் அதிபர்  ரவீந்தர்சிங் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்