முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் 5-வது தர நிலை வீராங்கனையாக அறிவிப்பு

வியாழக்கிழமை, 21 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 5வது தர நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 4ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சர்வதேச விளையாட்டு விழாவில் இந்தியா 121 வீரர்-வீராங்கனைகளுடன் போட்டியிடுகிறது.  இந்த போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளும் களம் இறங்குகிறார்கள்.  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் இந்த ஒலிம்பிக்கில் 5வது தர நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சக வீராங்கனையான பி.வி.சிந்து  9 வது நிலை வீராங்கனையாக களம் இறங்குகிறார்.

 ஆண்கள் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்த 9வது நிலை வீரராக உள்ளார். சாய்னா நேவால் உலக பாட்மிண்டன் அரங்கில் 5வது இடத்தில் இருப்பவர் ஆவார். பி.வி.சிந்து உலக பெண்கள் ஒற்றையர் போட்டியில் 10வது இடத்தில்  உள்ளார். ஸ்ரீகாந்த் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் உலக அளவில்  11வது இடத்தில் இருக்கிறார். தர வரிசை பட்டியல் உலக தர நிலை பட்டியல் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.  ஒலிம்பிக் பெண்கள்ஒற்றையர் போட்டி தர வரிசையில், இரு முறை உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின் முதல் நிலை வீராங்கனையாக உள்ளார். அவரை தொடர்ந்து சீனாவின் வாங் யிகான் 2வது தர நிலை வீராங்கனையாகவும் 3வது தர நிலை வீராங்கனையாக நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் லீ  ஜிகுயரி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்