முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாள் கொண்டாடிய ஹிலாரி: வாஷிங்டனில் ஹோட்டல் திறந்த ட்ரம்ப்!

வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி க்ளிண்டன் தனது 69 வது பிறந்த நாளை, அக்டோபர் 26ம் தேதி கொண்டாடினார். ஃப்ளோரிடாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஹிலாரிக்கு, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஆதரவாளர்கள் அனைவரும் ஹேப்பி பர்த்டே பாடி வாழ்த்து தெரிவித்தனர்.முந்தய நாள் பிரபல பாப் பாடகி அடல் நிகழ்ச்சியில் ஹிலாரி கலந்து கொண்டார். குடும்பத்தாருடன் தனியாக , ஹிலாரி.பிறந்த நாளைக் கொண்டாடினார்.ஆதரவாளர்களை விரைவில் முன் வாக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெறும் வரையிலும் நாம் ஓய்ந்து விடக் கூடாது. சற்றே அயர்ந்தாலும் ட்ரம்ப் வெற்றி பெற்று விடுவார். எனவே விழிப்புடன் இருந்து ஆதரவாளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.ஹோட்டல் திறந்த ட்ரம்ப்ஃப்ளோரிடாவில் வாக்கு சேகரித்த வேகத்திலேயே, வாஷிங்கடனுக்கு பறந்து, வெள்ளை மாளிகைக்கு மிக அருகாமையில் தனது புதிய ஹோட்டலை மனைவி, பிள்ளைகள் சகிதம் வந்து, ட்ரம்ப் திறந்து வைத்துள்ளார். தேர்தலின் கடைசி இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமான நேரத்தில், சொந்த வேலைக்காக ஹோட்டல் திறக்க போகிறாரே. அவருக்கே நம்பிக்கை இல்லையா என்று குடியரசுக் கட்சிக்குள் கேள்விகள் எழுந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்