முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிம்மதியான தூக்கத்தைப்பெற பருக வேண்டிய பானங்கள்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2016      மருத்துவ பூமி
Image Unavailable

*புதினா டீ
*சீமைச்சாமந்தி டீ
*வெதுவெதுப்பான பால்
*பாதாம் பால்
*தேன்
*இஞ்சி டீபுதினா டீ

நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து குடித்தால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

சீமைச்சாமந்தி டீ:: சர்க்கரை சேர்க்காத சீமைச்சாமந்தி டீயை இரவில் படுப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்தால், நரம்புகள் தளர்ந்து, மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

வெதுவெதுப்பான பால்: ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடல் நன்கு ரிலாக்ஸ் ஆகி, ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

பாதாம் பால்: பாலில் உள்ள வைட்டமின் ஈ, இரவில் இனிமையான தூக்கத்தைப் பெற உதவும். அதிலும் பாதாம் பாலை டின்னர் முடிந்து குடித்து, 1 மணிநேரம் கழித்து தூங்கினால், நன்கு தூக்கம் வரும்.

தேன்: வெதுவெதுப்பான பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், இரவில் தூக்கம் சீக்கிரம் வருவதோடு, மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்.

இஞ்சி டீ: இஞ்சி டீயை இரவில் குடித்தால், உணவுகள் எளிதில் செரிமானமாகி, செரிமான பிரச்சனைகளின்றி நல்ல ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

 இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago