முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

கோலாலம்பூர் : மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால், அஜய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மலேசிய மாஸ்டர்ஸ்

இந்த வருடத்தின் முதல் பேட்மிண்டன் தொடரான மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் சாய்னா நேவால் தாய்லாந்தின் சாசினீ கொரேபாப்பை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-9, 21-8 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

அஜய் ஜெயராம் முன்னேற்றம்

ஆண்கள் பிரிவில் அஜய் ஜெயராம் 21-10, 17-21, 21-17 என மலேசியாவின் ஜன் ஹயோ லியாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹேமந்த் எம். கவுடா, இரட்டையர் கலப்பு பிரிவில் மானு ஆத்ரி மற்றும் ஜூவாலா கட்டா ஜோடி தோல்வியை சந்தித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்