முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தகவல்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.01.2017 அன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி ஆவணங்கள் பொது விநியோகத்திட்டத்தின் ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மேலும் ஆகஸ்ட் 2016 முதல் டிசம்பர் 2016 வரை முடிய உள்ள காலத்தில் கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின்சாரம் மூலதனப்பணிகள்இ நிர்வாகம் மீதான செலவினங்கள் மற்றும் இதர செலவின விவரங்களை படித்துக் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள விபரம் மற்றும் திட்ட செயல்பாடு 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தொழிலாளர் வரவு செலவு திட்டத்தினை ஜனவரி 2015 முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் பிரதம மந்திரி கிராம சாiலைகள் திட்டம் ஐஐ கீழ் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை சபையில் ஒப்புதல் பெறுவது அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பது மற்றும் தாய் திட்டம் 2016-17 பணிகள் தேர்வு மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த வரவு செலவு, பணி முன்னேற்றம் குறித்து விவாதித்தல் தமிழ்;நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ்; பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் 5 மகளிர் குழுக்களுக்கு வழங்குதல் முழு கல்வியறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50000- வழங்குதல் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்இ தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டி மானியத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா மூன்று இலட்சம் 7சதவிகித வட்டியுடன் கூடிய வங்கிக் கடன் வழங்குதல். மிகை வட்டித் தொகையினை மான்யமாக வழங்குதல். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வறட்சி நிலைமையை போக்கிட நீர் நிலைகளை பராமரித்து கால்நடை பராமரிப்பு போன்ற செயல்பாடுகளில் மகளிர் சுய உதவிக் குழு ஈடுபட வேண்டுதல்.

 

வறுமை ஒழிப்பு

 

புதுவாழ்வு திட்ட கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் செயல்பாடுகள்;;இ கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்;இ முன் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி செல்லுதல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களை தடுத்தல் போன்றவற்றை செயல்படுத்தவது குறித்து விவாதித்தல் தொழுநோய் அறிகுறிகள் மற்றும் சிகிக்சை முறை தொடர்பான விளக்கத்தினை தெரிவித்தல் ஏளைழைn ஐனெயை - 2017 என்னும் மத்திய அரசின் 15 ஆண்டுக்கால செயல் திட்டம் குறித்து மக்கள் கருத்துரை கேட்டல் மற்றும் ஊராட்சி தனி அலுவலர் கொண்டு வரப்படும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவத்தினை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 430 கிராம ஊராட்சிகளிலும் 26.01.2017 அன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் பொது மக்கள்இ சுய உதவிக்குழு உறுப்பினர்கள்இ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்