முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி ஸ்ரீபாலவித்யாமந்திர் பள்ளியில் மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி பயிலும் ழலைகளுக்கு பட்டமளிப்பு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் உள்ள பாலவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி பயின்று முடித்த மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா டைபெற்றது. இதில் ஆரணி டிஎஸ்பி ராஜன் 43 மழலைகளுக்கு பட்டமளித்து பேசியது, ஆங்கில வழி பள்ளி என்றாலும் ஆங்கிலம் என்பது உலக மொழி ஆகும். நமது தமிழ்மொழியை யாரும் மறக்க வேண்டாம். தமிழையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். ஒழுக்கமாக உருவாக்குங்கள். அப்போதுதான் மாணவர்கள் பெருமைக்குரியவர்களாக வளர்வார்கள். பெற்றோர்களால் பாசத்தை மட்டுமே தரமுடியும். ஆசிரியர்களால்தான் கல்வியும், ஒழுக்கமும், பாசத்தையும் தரமுடியும். கல்வி பல்வேறு வகைகளில் முன்னேறியுள்ளது. அதற்கேற்றவாறு மாணவர்களை உருவாக்குங்கள் என்று பேசினார். மேலும் இதில் பள்ளி நிர்வாகத்தலைவர் சி.மோகன்ராஜ், தாளாளர் ஆர்.பாலாஜி, முதல்வர் திருஞானசம்பந்தம், துணைத்தலைவர் ஜெ.வாசு, பொருளாளர் எல்.அசோக், துணைசெயலாளர் ஆர்.ரவிசங்கர், இயக்குநர்கள் எஸ்.செந்தில்குமார், சி.பாலாஜி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்