முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.வி.நகரத்தில் மானிய விலையில் உலர் தீவனம் விற்பனையை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பார்வையிட்டார்

திங்கட்கிழமை, 1 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் மானிய விலையில் உலர் தீவனமான வைக்கோலை வழங்கும் திட்டத்தினை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பார்வையிட்டார்.

 

 உலர் தீவனம்

ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் மானிய விலையில் உலர் தீவனமான வைக்கோல் ஒரு கிலோ ரூ.2 என 105 கிலோ வரை பயனாளிக்கு வழங்கப்பட வேண்டும். இந்த வைக்கோல் வாரத்திற்கு ஒரு முறை 5 மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு தர வேண்டும். இத்திட்டம் செயல்படுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். ஏப்ரல் 1 முதல் இதுவரை சுமார் 40ஆயிரம் கிலோ விநியோகம் செய்துள்ளதாக தெரிவித்தனர். உடன் கால்நடை மருத்துவர் நிர்மலா, அதிமுக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை நிர்வாகி பாபு, எஸ்.வி.நகரம் வாசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்