முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குகள் விலையை குறைத்து காட்டி முறைகேடு: ஷாருக்கானுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

மும்பை, அந்நிய செலாவணி விதி மீறல் வழக்கில், ஆகஸ்ட் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது மனைவிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வாங்குவதற்காக, நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தொடங்கினார். அதன்பின் கேகேஆர் அணி உரிமையாளர்களில் ஒருவரானார். அவரது மனைவி கவுரி கான் மற்றும் நடிகை ஜுகி சாவ்லாவும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகளவில் வெற்றி அடைந்ததால், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கூடுதலாக 2 கோடி பங்குகளை வெளியிட்டது. இதில் மொரீஷியசில் உள்ள ஜுகி சாவ்லாவின் கணவர் ஜே மேத்தாவின் ‘தி சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு ஒரு பங்கு ரூ.10 என்ற விலையில் 50 லட்சம் பங்குகள் விற்கப்பட்டன. 40 லட்சம் பங்குகள் சாவ்லாவுக்கு விற்கப்பட்டன. ஷாருக்கானிடம் 1.1 கோடி பங்குகள் இருந்தன.

ஆனால், சந்தை மதிப்பை விட பங்குகளின் விலையை ஷாருக்கான் குறைத்து காட்டியதில் அரசுக்கு ரூ.73.6 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து ஷாருக்கான், கவுரி கான், ஜுகி சாவ்லா உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஆகஸ்ட் 23-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஷாருக்கான் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத் துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஏற்கெனவே, 2011, 2015-ம் ஆண்டுகளில் அமலாக்கத் துறை முன்பு ஷாருக்கான் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து