முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட சசிகலா செயல்பட முடியாத நிலையில் சிறையில் இருப்பதால்  கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க முடிவு முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த ஆலோசனைக்குழுவில் நேற்று முடிவு செய்யபட்டது. ஆலோசனைக்கு பிறகு  மூத்த அமைச்சர்கள்  தங்கமணியும் வேலுமணியும் கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீசெல்வம் வீட்டிற்கு வந்து ஆலோசனை நடத்தினர்.

இதை தொடர்ந்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். அதனை தொடர்ந்து ஒ.பிஎஸ் அணியினர் தலைமை அலுவலகம் வந்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். 6 மாதத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்துள்ளார். முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் கைகுலுக்கி இணைந்தனர். இரு அணிகளும் இணைந்தது.

பின்னர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் கூறியதாவது:-

உலக அரசியலில்  அரங்கில் அ.தி.முக  சரித்திரத்தை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும்  ஜெயலலிதாவின் ஒரு தாய் மக்கள்.எதிர்க்கும் கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வரலாற்று பாடமாக விளக்கும். அணிகள் இணைப்புக்கு ஒத்துழைப்பு தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனது மனிதில் இருந்த பாரம் குறைந்து விட்டது.அ.தி.மு.கவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் துணை ஒருங்கிணைப்பாளர்களாக கேபி முனுசாமியையும், வைத்திலிங்கத்தையும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் வழிகாட்டு குழுவில் 11 பேர் நியமிக்கபடுவார்கள். என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து