முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் மோடிக்காக ஒரு கோயில்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

மீரட்: பிரதமர் மோடி ஆதரவாளர்கள் அனைவரும் வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில், நரேந்திர மோடிக்காக உத்தரபிரதேச மாநிலம்  மீரட்டில் ஒரு கோயில் எழுப்பப்பட உள்ளது.

கோயிலை எழுப்பவுள்ள மோடி ஆர்வலரும் பொறியாளருமான ஜே.பி.சிங் இதுகுறித்து கூறும்போது, ''மீரட்டில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டப்பட உள்ளது. இங்கு பிரதமர் நரேந்திர மோடியின் 100 அடி உருவ சிலை உருவாக்கப்பட்டு பொருத்தப்படும்.

நீர்ப்பாசனத் துறையில் பொறியாளராகப் பணிபுரிந்த நான் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஓய்வு பெற்றேன். இந்தியத் தாய்க்காக நரேந்திர மோடி மேற்கொள்ளும் தொண்டுகளைக் கண்டு நான் ஈர்க்கப்பட்டேன். இதனால் அவருடைய வளர்ச்சி மாதிரியைக் கொண்டாடும் வகையில் இந்தக் கோயிலை அமைக்க உள்ளேன்.

இதற்காக மீரட் - கர்னல் நெடுஞ்சாலையில் 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. மோடி கோயிலைக் கட்டி முடிக்க 2 வருடங்கள் தேவைப்படும். வரும் அக்டோபர் 23-ம் தேதி அன்று பூமி பூஜை போடப்படும்.

கோயிலை எழுப்ப ரூ.10 கோடி தேவைப்படும் என்று கணக்கிட்டிருக்கிறோம். இத்தொகை மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்படும்'' என்று தெரிவித்துள்ளார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து