முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான பணி:கலெக்டர் கே.விவேகானந்தன், தீவிர ஆய்வு

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில், பிடமனேரி குடியிருப்புப் பகுதியில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 7.00 மணி முதல் 12.30 மணி வரை மாவட்ட கலெக்டர், கே.விவேகானந்தன், தீவிர கள ஆய்வு மேற்கொண்டு கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கினார்.

தீவிர ஆய்வு

 

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பிடமனேரி குடியிருப்புப்பகுதி மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக அகற்றவும், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகளின் அருகில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், நூலகம் மற்றும் நியாய விலைக் கடை அருகில் உள்ள குப்பைகளை அகற்றவும் உத்தரவிட்டார். மேலும், பாக்கியம் கிளினிக் பக்கத்து வீட்டில் உள்ள பழைய டயர்கள் சேகரம் செய்து வைக்கப்பட்டதை அகற்ற இரு முறை மஸ்தூர்களால் தெரிவிக்கப்பட்ட பிறகும் அந்த பழைய டயர்கள் அகற்றப்படாததால் 24 மணி நேரத்திற்குள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றைகளில் திடீர் ஆய்வு செய்து நாள்தோறும் கொசு மருந்து அடிக்கவும் நில வேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுரை வழங்கினார்.

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிறப்பு காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் காய்ச்சல் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார். தடங்கம் ஊராட்சியில் உள்ள ஆபுளு பிளாஸ்டிக் கிடங்கினை திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள பணியாளர்களுக்கு டெங்கு கொசு ஒழிப்பு பணி தொடர்பாக அறிவுரை வழங்கியும், சுத்தமாக வைத்துகொள்ளவும் அறிவுரை வழங்கினார். பழைய பிளாஸ்டிக் பொருட்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகத வண்ணம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது தருமபுரி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சீனிவாசராஜ், உள்ளிருப்பு மருத்துவர் மரு.சுரபி மற்றும் கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து