முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் புயல், மழையால் 133 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல், மழை, நிலச்சரிவு காரணமாக 133-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

டெம்பின் என்று பெயரிடப்பட்ட புயல் பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியை நேற்றுமுன்தினம் தாக்கியது. இதன்காரணமாக அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக பிலிப்பைன்ஸின் 2-வது மிகப்பெரிய தீவான மிண்டானோவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலோக் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலை, தெருக்கள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புயல், மழை, நிலச்சரிவு காரணமாக 133-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். போலீஸ், ராணுவம், பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து