முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்புக்குள் பிரதமர் - சி.பி.ஐ: மாயாவதி

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, டிச.14 - லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், சி.பி.ஐ.யை சேர்க்கவேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நாடுமுழுவதும் தற்போது ஊழல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஊழலை எதிர்ப்பதில் எனது அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. ஊழல் செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். மத்திய அரசு காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என அடுத்தடுத்து மிகப்பெரிய ஊழல்களில் சிக்கிக்கொண்டுள்ளதால் ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை. மத்திய அரசு பாராளுமனஅறத்தில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவால் எந்த பயனும் இல்லை என்பதால் இதனை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கிறது என்றார்.

மேலும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் சி.பி.ஐ.யை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் மற்றும் லோக்பால் விசாரணைக்குள் பிதமரையும் சேர்க்க வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது. குரூப்-சி பிரிவு ஊழியர்களையும் லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும். டெல்லியில் பிரதமர் இன்று கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு இந்த கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்