முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் மின் உற்பத்தியில் தமிழகத்திற்கு 50 சதவீதம் வழங்கப்படும்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மாஸ்கோ, டிச. - 19 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல்கட்டமாக 2 உலைகள் இயங்கத் தொடங்கும் போது அதில் இருந்து 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அதனை இயக்காமல் அப்படியே கிடப்பில் போட முடியாது. அப்பகுதி மக்கள் சிலர் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அவர்களது அச்சத்தை போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இப்பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர் தமிழக அரசு பிரதிநிதிகளுடனும், கூடங்குளம் பகுதி மக்களுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்படும் என்று நினைக்கிறேன். கூடங்குளத்தில் முதல்கட்டமாக இரு அணு உலைகள் செயல்பட தொடங்கும் போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும். எஞ்சியவை மத்திய மின் தொகுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் முன்னின்று செயல்பட பிரதமர்தான் பொருத்தமான நபர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை எழும் போது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.
நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. அமைச்சரவை முடிவுக்குப் பின் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். லோக்பால் மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிதம்பரத்திடம் நேரிடையாக பேசவில்லை. இநத் விவகாரத்தில் அவர் அளித்திருக்கும் விளக்கமே போதுமானது என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்