முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

தென்னாப்பிரிக்க அணியுடனான விறுவிறுப்பு நிறைந்த மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1  என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தாலும், 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இதனையடுத்து, இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இரண்டு போட்டிகள் முடிவுற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் பரபரப்பு இருந்தது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி கேப்டன் விராத் கோலி இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. தவான் 40 பந்துகளில் 47 ரன்களும், சுரேஷ் ரெய்னா 27 பந்துகளில் 43 ரன்களும் விளாசினர். தென்னாப்பிரிக்க தரப்பில் ஜூனியர் டாலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டூமினி 41 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிறிஸ்டியன் ஜோங்கர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார். கடைசி இரு பந்துகளில் தென்னாப்பிரிக்கா 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஐந்தாவது பந்தில் புவனேஷ்வர் குமார் இரண்டு ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியிருந்த நிலையில், கடைசி பந்தில் ஜோங்கரின் விக்கெட்டையும் புவனேஷ்வர்குமார் வீழ்த்தினார். ஜோங்கர் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ஆட்டநாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து